தொகுதி முழுவதும் வன்முறை.. தேர்தலை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு..! மே 21ல் மறுவாக்குப்பதிவு..!
மேற்கு வங்கத்தில் ஓட்டு எண்ணிக்கை பணியில் மாநில அரசு ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு அதிரடியாக தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் யாரை நியமிக்க வேண்டும் என்பது அதன் தனிப்பட்ட அதிகாரம் என்றும், இது விதிகளுக்கு எதிரானது அல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் வன்முறை மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 285 ஓட்டுச்சாவடிகளிலும் வரும் மே 21-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் மே 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நாளை நடைபெறவுள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
