தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்! – ஏற்பாடுகள் தீவிரம்!
- சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்; பூமியில் வெப்பம் அதிகரிக்கும்! – விஞ்ஞானிகள் தகவல்!
- இலங்கைத் தமிழர்கள் வருகை தொடருமா? மன்னாரிலிருந்து கள ஆய்வு
- ”என்ன உதவினாலும் கேளுங்க.. - மூதாட்டிக்கு காலணி அணிவித்த டிராபிக் போலிஸ்!
- பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - தடகள பயிற்சியாளர் கைது
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செல்லும்! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்க உரிமை இருந்தாலும், சரியான காரணம் தேவை என்றும், இந்த இடஒதுக்கீட்டில் சரியான காரணங்கள் இல்லை என கூறி, உயர்நீதிமன்ற கிளை இடஒதுக்கீடுக்கு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
