1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. supreme court adjourned eps tender case

ஈபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

edappadi
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் திடீரென இன்று விசாரணை செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது
 
இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
ஹாரன் அடிச்ச நகர மாட்டியா..? – காது கேளாதவரை குத்தி கொன்ற சிறுமி!