திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (11:40 IST)

ஹாரன் அடிச்ச நகர மாட்டியா..? – காது கேளாதவரை குத்தி கொன்ற சிறுமி!

சத்தீஸ்கரில் சாலையில் வழிவிடாத காது கேளாத நபரை 15 வயது சிறுமி குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நெரிசலான சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மெதுவாக சென்றதால் சிறுமி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

ஆனாலும் முன்னால் சென்றவர் தொடர்ந்து மெதுவாகவே சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வேகமாக சென்று அந்த வாகனத்தை வழிமறித்ததுடன் அதை ஓட்டி சென்றவர் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி பதட்டத்தில் தன் தாயாரை சாலையிலேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியை கைது செய்துள்ளனர். விசாரணையில் இறந்த நபர் காதுகள் கேட்கும் திறன் அற்றவர் என்ற சோகமான உண்மை தெரியவந்துள்ளது.