திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (08:21 IST)

சத்தியாகிரக போராட்டம் நடத்த காங். திட்டம்!

ஜூலை 26 ஆம் தேதி (நாளை) சத்தியாகிரக போராட்டம் நடத்த நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து சமீபத்தில் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிய நிலையில் அவரிடம் விசாரணை முடிந்தது.

இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி முழுமையாக குணமடைந்து உள்ளதால் அவரிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனையடுத்து முதல் பிசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். விசாரணையும் நடைபெற்று முடிந்தது.  

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26 ஆம் தேதி (நாளை) சத்தியாகிரக போராட்டம் நடத்த நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26 ஆம் தேதி சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இந்த போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.