குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம்!.. சுந்தர்.சியின் வேட்புமனுவில் தகவல்!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கமலின் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சி-க்கு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அதன்பின் அரண்மனை 5 படத்தையும் இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் இயக்குனர்கள் சுந்தர்.சி திடீரென ஒரு அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சினந்த்தில் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, இன்று அவர் மதுரைக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.. அவருடன் குஷ்புவும் வந்திருந்தார்.
வேட்புமனுவில், பாஜக நிர்வாகியும் தனது மனைவியுமான குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம் இருப்பதாகவும், 24 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சுந்தர் சி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னிடம் மூன்று கார்களும் குஷ்புவிடம் ஒரு காரும் இருப்பதாக அவர் வேட்புமனவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சுந்தர்.சியின் பெயரில் 2.97 கோடி அசையும் சொத்தும், 17.7 கோடி மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாகவும், குஷ்பு பெயரில் 6 கோடி அசையும் சொத்தும், 4.17 கோடிக்கு அசையா சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.