1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (16:09 IST)

சுப்மன் கில் அபார சதம்.. 300ஐ நோக்கி இந்தியாவின் ஸ்கோர்!

subman gil
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹைதராபாத் மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் 35 ஓவர் முடிவில் இந்தியா தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்துள்ள நிலையில் இந்தியா 300 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 34 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதமடைந்துள்ளார் என்பதும் அவர் தற்போது 112 ரன்கள் உடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இணையாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து வருகிறார். இன்றைய போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran