1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: புதன், 18 ஜனவரி 2023 (14:53 IST)

மீண்டும் ஏமாற்றிய கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதை அடுத்து பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து  தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்த நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த கோலியும் 8 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தற்போது 2 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.