'மெர்சல்' படம் பார்க்கவா இலவச லேப்டாப் கொடுத்தோம்? தம்பிதுரை காட்டம்
ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச மடிடிக்கணி கொடுப்பது மெர்சல்' படம் பார்ப்பதற்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் அல்ல என்று தம்பிதுரை எம்பி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை எம்பி, 'மெர்சல், பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு தரப்படவில்லை. அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை மாணவர்கள் சரியான வையில் பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார்.
தம்பிதுரையின் இந்த கருத்துக்கு பலர் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒரு டுவிட்டர் பயனாளி, 'அதிமுகவுக்கு ஓட்டு போட்டது கூவத்தூர் சென்று கும்மி அடிக்க அல்ல' என்றும் இன்னொரு டுவிட்டர் பயனாளி, 'அப்ப எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரடி ஒளிபரப்பு பாக்கலாமா? என்றும், நாங்களும் உங்கள் அரசாங்கத்திற்கு ஓட்டு போட்டது தமிழ் நாட்டை நல்வழியில் நடத்துவதற்கே தமிழ் நாட்டை கேவலப்படுத்துவதற்கு அல்ல' என்று மற்றொரு டுவிட்டர் பயனாளியும் கூறியுள்ளனர்