1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:27 IST)

நான் என்ன இன்கம்டாக்ஸ் அதிகாரியா?- நிருபர்களிடம் கேட்ட தம்பித்துரை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, இந்த விலையில்லா மடிக்கணினி கொடுப்பது, பொது அறிவை வளர்த்துக் கொள்ளவே தவிர, இதை வைத்து பிக்பாஸ் மற்றும் மெர்சல் திரைப்படங்கள் பார்ப்பதற்கு இல்லை என்று தெரிவித்தார்.



 


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பித்துரை., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி தரப்பட்டு வருகின்றது என்றார். அப்போது, வருமான வரித்துறையினர் ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் அலுவலகங்கள் நடத்தப்படுகின்றதே, டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திட்டமிட்டபடியே நடத்தப்படுகின்றதே, என்று வினா எழுப்பியதற்கு ? அதை என்னை கேட்டால் நான் என்ன இன்கம்டாக்ஸ் ஆபிசரா ? வருமான வரித்துறை சோதனையை அதிகாரிகளிடம் தான் நீங்கள் கேட்க வேண்டுமென்றார்.

ஆங்காங்கே தமிழக அளவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும், மம்தா பானர்ஜி முதல் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆளுகின்ற மத்திய அரசு மற்றும் மாநில அரசில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் இந்த பதில் நிருபர்களுக்கே பாடம் எடுத்தது போல் இருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகளும், அ.தி.மு.க நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்- கரூர்