வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (15:33 IST)

மெர்சல் மேக்கிங்கை ட்விட்டரில் வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வெளியான மெர்சல் படம், சிகர்களின் பலத்த  எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

 
'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர  ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள். 'மெர்சல்' படக்குழுவின் உழைப்பால் மெர்சல்  உலகம் முழுவதும் வெர்றி நடை போட்டு வருகிறது.

 
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் மேஜிக் காட்சியின் மேக்கிங் வீடியோ கடந்த வாரம் வெளியானது. படத்திற்காக, படக்குழுவினரால் அதிக உழைப்பில் உருவாக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் புகைப்படங்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.