தொடர்புடைய செய்திகள்
- இந்த டீலுக்கு அப்புறம்தான் பஸ் டிக்கெட் விலை ஏத்தினாங்க - கொளுத்தி போடும் செந்தில் பாலாஜி
- எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மோதல்: டுவிட்டரில் சரவெடி!
- வாலிபருடன் உல்லாசமாக இருக்கும் ஆசிரியை ; வெளியான வீடியோ : ஓசூரில் அதிர்ச்சி
- சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்கள்
- பணக்கார பெண்களே என் டார்கெட் - மோசடி காதல் மன்னன் வாக்குமூலம்
பிப்ரவரியில் தமிழக அரசியலில் புயல் அடிக்கும்: காரணங்கள் உள்ளே!
எடப்பாடி, பன்னீருக்கு சாதகமாக அடித்து வந்த டெல்லி காற்று தற்போது புயலாக மாறி அவர்களை கவிழ்க்கும் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் வானிலை கூறுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அதில் தமிழக பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி தமிழகத்தில் மேலும், மேலும் சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் தமிழக பாஜக இந்த அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வருகிறது. பாஜக மீது மேலும் வெறுப்பு உண்டாக இதுதான் காரணம் எனப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டை பார்த்த தலைமை படு டென்ஷனாக உள்ளதாம்.
எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை எல்லாம் டெல்லி தரப்பு நடத்தியதாக தகவல் வருகிறது. இந்த ஆலோசனையில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு, திமுக தொடர்ந்த குட்கா வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும்.
இந்த தீர்ப்புகள் அனைத்தும் எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும் என கூறப்படுகிறது. அப்போது அதையே காரணமாக வைத்து எடப்பாடி அரசின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்றால், ஆட்சியை கலைத்து ஆளுநரைப் பயன்படுத்தி இப்போதைக்கு நிர்வாகம் செய்யலாம் என்பது. எனவே பிப்ரவரி மாதம் தமிழக அரசியலில் புயல் அடிக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
