திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (17:41 IST)

தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி விருது - இது புதுசு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பொது நல சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் வலம் வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். திமுக, தினனகரன், கமல்ஹாசன் என தமிழகத்தின் அடுத்த அரசியல் தலைவராக யார் தன்னை முன்னிறுத்துக் கொண்டாலும், அவர்களை தமிழிசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
இவர் என்ன பேசினாலும் அது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக மாறி கிண்டலடிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
 
இந்நிலையில், 2017ம் ஆண்டில் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவர் விருதை, சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.