திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (14:02 IST)

கணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுக்கடுக்காக போட்டுத் தள்ளும் மனைவி

கணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய  எழிலரசி என்ற பெண் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்காலைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த வினோதா, ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரை வைத்து ராமுவையும், எழிலரசியையும் தாக்கினார்.  கூலிப்படையினர் தாக்குதலில் ராமு இறந்துவிடவே எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார்.
 
இதனையடுத்து உயிர் தப்பிய எழிலரசி வினோதாவை கொல்ல திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கடந்த 2014-ஆம் ஆண்டு வினோதாவை கொடூரமாக கொலை செய்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசியை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
 
கடந்தாண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரை கூலிப்படையை ஏவி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றார். இதனால் எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, கணவரின் கொலையில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். இதனையறிந்த போலீஸார் எழிலரசி மற்றும் அவருடன் இருந்த 13 ரவுடிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.