மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்! – கல்லூரி இயக்ககம் உத்தரவு!
கல்லூரிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கு தடுப்பூசி கட்டாயாமாக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரிகள், பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டுள்ள கல்லூரி கல்வி இயக்ககம், அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் மாஸ்க் அணிவது, சானிட்டைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.