ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (00:15 IST)

''பசுமை தமிழ்நாடு'' திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு!!

தமிழக அரசின் ''பசுமை தமிழ்நாடு'' திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு  தெரிவித்துள்ளார்.!!

கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இதில், திமுக- அதிமுக இடையேயான கடுமையான போட்டியில், ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அவரது ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இதற்காக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஈஷா அறக்கட்டளை ந்றுவனர் ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், மண் வளத்தை அதிகரிப்பதற்கும், மாநிலத்தின் செழிப்பையும் மக்களின் நல்வாழ்வை அதிகரிப்பதற்கு                இது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.