செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (10:34 IST)

சொர்க்கவாசல் திறப்பில் கொரோனா கட்டுப்பாடுகள் இருக்குமா? – அமைச்சர் விளக்கம்!

ஜனவரி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல் திறப்பும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஜனவரி 13 அன்று நடைபெறுகிறது. தற்போது ஒமிக்ரான் பரவல் போன்ற அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியின்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அப்போதைய சூழ்நிலையை பொறுத்து அதுகுறித்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.