1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (11:40 IST)

முலாயம் சிங் மருமகளுக்கு சீட் இல்லை: பாஜக காட்டிய அதிரடி!

முலாயம் சிங் மருமகளுக்கு சீட் இல்லை: பாஜக காட்டிய அதிரடி!
சமீபத்தில் மக்க பாஜகவில் சேர்ந்த முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் அறிவிப்பு காரணமாக கட்சி தாவல் நிறைய நடைபெற்றது என்பதை பார்த்தோம். குறிப்பாக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர்களும் அகிலேஷ் யாதவ் கட்சிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகள் அபர்ணா பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் இல்லை என பாஜக மேலிடம் கைவிரித்து விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 இதனால் பாஜகவை சேர்ந்த முலாயம் சிங் யாதவ் வெளியேறுவாரா? அல்லது பொறுத்திருந்து வேறு பதவிகளுக்காக காத்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்