இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் - பட்ஜெட் அறிவிப்புகள்!
நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அந்த வகையில் இயற்கை விவசாயம் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு...
இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது
கங்கை கரையோரம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சிறுதானிய விற்பனையை நாடு முழுவதும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
44 ஆயிரம் கோடி ரூபாயில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்
வேளாண் நிலங்களை அளவிட ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படும்
புதிதாக 9 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி செய்யும் வகையில் 5,700 கோடி ரூபாயில் திட்டங்கள் உருவாக்கப்படும்
விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு