1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. student who helped for love is suicide

பள்ளித் தோழியின் காதலுக்கு உதவிய மாணவி தற்கொலை! பெரும் பரபரப்பு

தோழி
கள்ளக்குறிச்சி அருகே பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அன்பு என்ற மாணவி தனது சக மாணவியின் காதலுக்கு உதவியதால் தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 
 
மாணவி அன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவருடன் படித்துவந்த தோழிக்கும் அதே பகுதியை சேர்ந்த தீனா என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.  அதற்கு அன்புவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது 
 
தோழியின் காதலுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு தோழிக்கும் தீனா என்ற இளைஞருக்கும் ஒரு கோவிலில் அன்புவே திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் காதலர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அன்பு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் 
 
இந்த நிலையில் பள்ளி சென்ற தனது மகள் வீடு திரும்பாததை அறிந்ததும் காணாமல் போன மாணவியின் பெற்றோர் பள்ளியில் சென்று விசாரிக்கும்போது, அந்த மாணவி அன்புடன் பாதியிலே வெளியே சென்றதாக கூறினர். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அன்புவின் வீட்டுக்கு வந்து தனது மகள் எங்கே என்று உண்மையைச் சொல்லாவிட்டால் போலீசில் புகார் செய்யவுள்ளதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அன்பு, பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
கிண்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : கடுமையாக போக்குவரத்து பாதிப்பு !