இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் – கதறும் நீரவ் மோடி!

nirav modi
Prasanth Karthick| Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (15:56 IST)
லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடி “என்னை இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்” என கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இந்தியா அரசு கேட்டு வருகிறது. அதற்குள் எப்படியாவது ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என நீரவ் மோடி முயற்சித்தார்.

ஆனால் நீரவ் மோடியின் ஜாமீன் மனுக்களை கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு அளித்த நீரவ் மோடி ‘சிறையில் சில கைதிகள் தன்னை தாக்குவதாகவும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்க கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரது இந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத கோர்ட் அவரது மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது.இதில் மேலும் படிக்கவும் :