தொடர்புடைய செய்திகள்
- இவன் கூப்பிட்டா போகணுமான்னு நினைக்காதீங்க! எதிர்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்!
- தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!
- நான் ஆட்சியில் இருந்திருந்தா அறுத்து விட்ருப்பேன்! - வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!
- இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகளில்? - சென்னை வானிலை ஆய்வு மையம்!
- டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக வெளியேறிய பிரமுகர்கள்..!
அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்..!
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தெருநாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெருநாய்களின் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வந்தவாசியில் அடுத்தடுத்த இரண்டு சிறுமிகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், இரண்டு இடங்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களின் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
வந்தவாசி பஜார் வீதியில், ஒரு சிறுமி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, தெருநாய்கள் சுற்றிவந்து கடித்துள்ளன. அதேபோல், இன்னொரு சிறுமி நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தனது தாயுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென தெருநாய்கள் தாக்கியுள்ளன.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Siva
