சிசிடிவியை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன் – வைரல் வீடியோ!

cctv
Prasanth Karthick| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (15:08 IST)
சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர் அங்கு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்ததும் பதறி ஓடிய காட்சி வைரலாகியுள்ளது.

சென்னை சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். சமீபத்தில் வீட்டை பூட்டிவிட்டு ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர் எங்கேயோ வெளியே சென்றிருக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொள்ளையடிக்க வந்திருக்கிறான் மர்ம ஆசாமி ஒருவன்.

முன்கதவு கேட்டை திறந்தவன் கதவை உடைக்க முயற்சிக்கும்போது கதவிற்கு மேல் சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பதை பார்த்திருக்கிறான் கொள்ளையன். உடனே மாட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயத்தில் தலையில் அடித்து கொண்டு ஓடிவிட்டான்.
இந்த வீடியோவை வைத்து காவல் நிலையத்தில் ஸ்ரீதர் அளித்த புகாரை வைத்து மர்ம ஆசாமியை போலீஸ் தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :