திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், தமிழக வெற்றி கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளதால், இப்போது கருத்து சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார். எனினும், தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, தி.மு.க.வின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது என்றும், ஏன் கூட்டம் கூட அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணி வரை தீபம் ஏற்றுவதாக கூறியதால்தான் அங்கே கூட்டம் சேர்ந்தது. முன்பே தெளிவாக சொல்லியிருந்தால், பதற்றம் ஏற்பட்டிருக்காது. பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் நிர்மல் குமார் கூறினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்ற நிலையில், த.வெ.க.வின் மௌனம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.
Edited by Mahendran