விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!
இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதில் முக்கியமாக விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்ற தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக இந்த தீர்மானம் விளக்கி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்களிடம் மட்டுமே கூட்டணி என்ற இயற்றப்பட்ட தீர்மானம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் உள்பட சில அரசியல் கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இம்மாத இறுதியில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva