வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (14:11 IST)

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பொன்னார்..

பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், சீன அதிபரின் வருகையை குறித்து ஸ்டாலின் ஆதரித்து பேசியமைக்காக பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், மாமல்லபுரம் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “சீன அதிபரின் வருகை மிகவும் முக்கியமான ஒன்று. சீன அதிபரை வருகையை நான் ஆதரிக்கிறேன்” என கூறினார். மேலும் சீன அதிபரின் வருகைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடி-ஜின்பிங் வருகையை ஆதரித்த பேசியதற்காக முக ஸ்டாலினுக்கு வைகோவிற்கும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கட்சிக்கு அப்பாற்பட்டு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக மோடி வருகையை எதிர்த்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது மோடியும் சீன அதிபரும் சந்திப்பதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.