பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு நேரில் பாமகவின் நிர்வாகி அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ம.க. இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சி சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி டிசம்பர் 17-ஆம் தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நேரில் சென்று பா.ம.க.வின் முக்கிய நிர்வாகியான வழக்கறிஞர் பாலு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டதாகவும், இதனை அடுத்து பா.ம.க.வின் போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தமிழக வெற்றி கழகத்துடன் பா.ம.க. கூட்டணி வைக்க ஒரு அச்சாரமாக இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva