2 ஆவது மாடியிலிருந்து சிறுமியை தூக்கி வீசிய கொடூர சித்தி..

Arun Prasath| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (12:26 IST)
இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை, சித்தி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு 6 வயதில் ராகவி என்ற சிறுமி இருந்தார். இந்நிலையில் ராகவி, இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக ராகவியை அவரது குடும்பத்தார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் துர்திர்ஷடவசமாக சிறுமி இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இது குறித்து, சிட்லபாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை குறித்து போலீஸார் ராகவியின் சித்தி சூர்யகலாவை (அதாவது இரண்டாவது தாய்) சந்தேகத்தின் பேரில் துறுவி விசாரித்ததில், தான் சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீஸார் சூர்யகலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

6 வயது சிறுமியை கொடூரமாக மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :