ராமர் பாலம் மெய்யாலுமே இருந்தது! – ஆதாரத்துடன் ஆஜர் ஆன எச்.ராஜா!

h raja
Prasanth Karthick| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (12:52 IST)
சமீபகாலமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வரலாற்று சம்பவங்களின் மேல் ஆர்வமாக இறங்க தொடங்கியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவுகளில் வரலாற்று சம்பவங்கள், சித்தர்கள் குறித்து நிறைய எழுதுகிறார்.

தற்போது ராமர் பாலம் உண்மையாகவே இருந்தது என்று ஒரு பதிவை எடுத்து கொண்டு களம் இறங்கியிருக்கிறார். இந்து கடவுளான ராமர் இலங்கையில் இருந்த ராவணனுடன் போரிட சென்றார். இடையே இருந்த கடல்பகுதியை கடக்க ராமருக்கு வானரங்கள் உதவின. அவை கற்களை கொண்டு ஒரு பாலத்தை அந்த வழியில் அமைத்தன என்று இராமாயணத்தில் உள்ளது.

சமீப காலமாக பல வெளிநாட்டு அறிஞர்களும் ராமர் பாலம் இருப்பதாக சொல்லப்படும் தனுஷ்கோடி கடல்பகுதிகளில் வரலாற்று ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை காணப்படும் மணற் திட்டுகள் 4000 வருடம் வரை பழமையானது என்றும், ஆனால் அந்த மணற் திட்டுகள் உருவாக காரணமான பாறைகள் 7000 வருடங்கள் பழமையானவை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதாக எச்.ராஜா குறிப்பிடுகிறார்.

இதன்மூலம் 7000 வருடங்கள் முன்பே ராமர் இங்கு வாழ்ந்ததாகவும், இந்து மதம் இங்கு இருந்ததாதகவும் எச்.ராஜா நிறுவ முயல்வது போல் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் அருகே கண்டெடுக்கப்பட்ட கீழடி தொல்பொருட்கள் 2600 வருடங்கள் பழமையானவை என தெரிய வந்திருக்கும் சூழலில் 7000 வருடங்கள் முன்னரே ராமரும், இந்து மதமும் இருந்ததாக எச்.ராஜா கூறுவது அரசியல் நோக்கத்துடனான கூற்றா என்று அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :