வாக்குறுதி கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு கடிதமா?? பொங்கி எழும் ஸ்டாலின்
”என்பிஆர் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன” என கூறிவிட்டு, தற்போது என்பிஆர்-ல் தந்தை, தாயார் பெயர் ஆகியவற்றை தவிர்க்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது யாரை ஏமாற்றுவதற்கான நாடகம்? என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்.பி.ஆர். குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, “என்பிஆர், ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன” என அமைச்சர் உதயகுமார் கூறிய நிலையில் தற்போது, “தாய் மொழி, தந்தை, தாயார், பிறந்த இடம், பிறந்த தேதி, ஆகியவற்றை தவிர்க்கலாம் எனவும், “ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் எனவும் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “என்பிஆர், ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன” என அமைச்சர் உதயகுமார் கூறிய நிலையில் தற்போது, “தாய் மொழி, தந்தை, தாயார், பிறந்த இடம், பிறந்த தேதி, ஆகியவற்றை தவிர்க்கலாம் எனவும், “ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் எனவும் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடகம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவ்வறிக்கையில் “என்பிஆர் விவகாரத்தில் அமைச்சர் உதயக்குமாருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் எந்த கருத்தொற்றுமையும் இல்லை, புரிதலும் இல்லை” எனவும் கூறியுள்ளார்.