செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2020 (14:03 IST)

குழந்தைகளின் உயிரை குடித்த மருந்து: தமிழகத்தில் தடை!

காஷ்மீரில் ஒன்பது குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இருமல் மருந்து தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் இருமல் மருந்து ஒன்றினை குடித்த 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தைகள் இறக்க காரணம் COLDBEST-PC என்ற இருமல் மருந்து என கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கலக்கப்பட்ட ஒரு துணை வேதிப்பொருள் விஷத்தன்மை கூடியதாக ஆக்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசால் நேரடியாக தடை செய்யப்படாததால் ஆன்லைன் மூலம் விற்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.