1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cauvery agriculture zone law

பேரவையில் நிறைவேறியது காவிரி வேளாண் மண்டல சட்டம்..

காவிரி
சட்டசபையில் காவிரி வேளாண் மண்டலத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து  சட்ட அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதிகளை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாக நிறைவேறியுள்ளது. மேலும் அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
ஆட்சியை பிடிக்க பாஜகவின் கடைசி ஹோப் ரஜினி: அமீர் ஓபன் டாக்!!