வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:50 IST)

துக்க நிகழ்ச்சியில் ஸ்டாலின் & அழகிரி!

துக்க நிகழ்ச்சியில் ஸ்டாலின் & அழகிரி!
ஸ்டாலின் மற்றும் மு க அழகிரி ஆகியோர் குடும்ப துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டாலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரரான முக தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி நேற்று கோவையில் காலமானார். அவரின் இறுதி மரியாதை நிகழ்வில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் ஸ்டாலினின் சகோதரரான அழகிரியும் கலந்துகொண்டார். இருவரும் அந்த நிகழ்வில் 45 நிமிடங்கள் வரை ஒரே நேரத்தில் இருந்தாலும் இருவரும் சந்தித்துகொள்ளவில்லை.