1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. KS Alagiri says ADMK needs to protest against BJP

பாஜகவை எதிர்த்து போராட வேண்டும் - அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ்!

தமிழகம்
திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதை விடுத்து பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும் என கே.எஸ்.அழகிரி பேட்டி. 

 
மக்களின் அடிப்படை தேவைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் திமுக அலட்சியம் செய்வதாகவும், வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவை எதிர்த்து மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
முன்னதாக 12 ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் பின்னர் 17 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு திமுக அரசை கண்டித்து அதிமுக தமிழக அளவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். 
 
அவர் கூறியதாவது, அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம். திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதை விடுத்து பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும். அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை எனவும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
குரங்கு குட்டியை கொன்ற நாய்கள் ... பழிக்கு பழியாக 80 நாய்கள் குரங்குகள்...!