புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:55 IST)

மின்னணு தகவல் பலகை: நாளை முதல் பயன்படுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்!

நாளை முதல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மின்னணு தகவல் பலகையை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து முதல்வர் அலுவலகம் டிஜிட்டல் மயமாகி வருகிறது என்பதும் அதேபோல் சட்டமன்ற வளாகம் டிஜிட்டல் மயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தலைமைச் செயலகம் முழுவதுமே தற்போது டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில் நாளை முதல் மின்னணு தகவல் பலகையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
தமிழக அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை தனது அலுவலக அறையில் இருந்தபடியே கண்காணிக்கும் வகையில் மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நாளை முதல் அவர் பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.