1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (16:30 IST)

ரஜினிகாந்தை சந்தித்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்களை இருவரும் பேசியதாக தெரிகிறது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வப்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் சந்தித்து வருவது வழக்கமான ஒன்றே. இந்த நிலையில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சினை, சினிமா குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது. மேலும் இலங்கைக்கு வருமாறும், அங்கிருக்கும் தமிழர்களை சந்திக்குமாறு ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இலங்கை முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஒருவர் ரஜினியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது