புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:17 IST)

13 பந்துகளில் 4 விக்கெட்டுக்கள்: இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை!

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால், இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் திடீரென 13 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மளமளவென இந்தியா இழந்தது. 10.5-வது ஓவரில் தவானும், 11.3வது ஓவரில் சஞ்சு சம்சன் சஞ்சு சாம்சனும், 12.3 ஆவது ஓவரில் கேஎல் ராகுலும், 12.5வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யரும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்திய அணி தற்போது திணறி வருகிறது
 
தற்போது 10 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலியும், 11 ரன்களுடனும் பாண்டியாவும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் பந்து வீச்சாளரான சண்டகன் 3 விக்கெட்டுகளையும் டி சில்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது