1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:55 IST)

11 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸில் கடந்த விராட் கோலி !

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால், இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் 196 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்த விரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் திடீரென 13 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மளமளவென இந்தியா இழந்தது. 10.5-வது ஓவரில் தவானும், 11.3வது ஓவரில் சஞ்சு சம்சன் சஞ்சு சாம்சனும், 12.3 ஆவது ஓவரில் கேஎல் ராகுலும், 12.5வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யரும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்திய அணி தற்போது திணறி வருகிறது
 
தற்போது 10 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலியும், 11 ரன்களுடனும் பாண்டியாவும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் பந்து வீச்சாளரான சண்டகன் 3 விக்கெட்டுகளையும் டி சில்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்துள்ளன. இதன் மூலம் இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.
 
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், 252 இன்னிங்ஸிலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்மித் 264 உஇன்னிங்ஸிலும் 11 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி, வெறும் 196 இன்னிங்ஸில் 11 அயிரம் ரன்களை எடுத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனி, 324 இன்னிங்ஸில் தான் 11 ஆயிரம் ரன்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.