திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்: 5 மீனவர்கள் காயமா?

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்: 5 மீனவர்கள் காயமா?
கடந்த பல வருடங்களாக இராமேஸ்வரம் உள்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்கி வருவதும், கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வருவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன
 
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த இலங்கை கடற்படையின் கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது 
 
இதன் காரணமாக மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியதாக தெரிகிறது. அந்த விசைப் படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த சம்பவம் காரணமாக 5 மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன