1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin letter to minister jaisankar

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள்
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை வரவிருப்பதை அடுத்து இந்த பண்டிகையை மீனவர்கள் சந்தோசமாக கொண்டாடும் வகையில் அதற்கு முன்னரே விடுவிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
பொங்கல் தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?