புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இந்திய போர் கப்பலில் வெடி விபத்து : கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

இந்திய போர் கப்பலில் வெடி விபத்து : கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
இந்திய போர் கப்பலில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பலில் திடீரென வெடிவிபத்து நடந்ததாகவும் இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் இந்த வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் படையினர் மும்பை கடற்படை தளத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் மேலும் அந்த கப்பலில் கடற்படையினர் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த வெடி விபத்திற்கு காரணம் சதியா? அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய போர்க் கப்பலில் வெடி விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது