செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated: வியாழன், 29 செப்டம்பர் 2022 (17:10 IST)

ஆயுத பூஜை விடுமுறை: 2 நாட்கள் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

koyambedu
ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் 30-ஆம் தேதி முதலே பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran