வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:52 IST)

மின்சார ரயிலில் வௌவால் போல் தொங்கும் வாலிபர்கள்! – வைரலாகும் வீடியோ!

Train Stunt
சென்னை மின்சார ரயிலில் இளைஞர்கள் பலர் அபாயகரமாக தொங்கியபடி பயணித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க மின்சார ரயில், பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில காலமாகவே மாணவர்கள் பலர் பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஆபத்தான வகையில் மேற்கொள்ளும் சாகசங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வகை ஆபத்தான சாகசங்கள் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதோடு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக மாறி வருகிறது. சமீபத்தில் சென்னை அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்று ரோட்டில் காலை தேய்த்தபடி வந்த மாணவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.


இந்நிலையில் தற்போது சென்னை மின்சார ரயிலில் கதவிற்கு வெளியே வௌவால் போல தொங்கியபடி இளைஞர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே கோட்டம் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.