வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (07:52 IST)

தமிழகம் முழுவதும் பரவலான மழை.. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Rain
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக காற்று திசை வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பெரிதும் உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது. நேற்று மாலை முதலே சென்னையில் நல்ல வேலையில் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை மக்கள் நேற்றிரவு குளிர்ச்சியான தட்ப வெப்பத்தை அனுபவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது