1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (11:37 IST)

தமிழகத்தில் மோடிக்கு கோவில்! – விவசாயியின் பிரதமர் பாசம்!

தமிழகத்தில் மோடிக்கு கோவில்! – விவசாயியின் பிரதமர் பாசம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் “கோ பேக் மோடி” ட்ரெண்டாகி வரும் அதே தமிழகத்தில் மோடிக்கு கோவில் எழுப்பி வணங்கி வருகிறார் விவசாயி ஒருவர்.

திருச்சி அருகே உள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். சிறுவயது முதலே மோடியின் தீவிர ரசிகராக இருந்த சங்கர் மோடிக்கு கோவில் கட்ட எண்ணியுள்ளார். அதன்படி தனது விவசாய தோட்டத்தில் ஒரு பகுதியில் மோடியின் அரை உருவ சிலை ஒன்றை நிர்மாணித்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார். தினமும் பாலபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபட்டு வருகிறாராம்.

இதுகுறித்து கூறியுள்ள சங்கர் ‘நான் சிறுவயது முதலே மோடியின் தீவிர ரசிகனாக இருந்தேன். அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அது முடியவில்லை. தற்போது கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு இந்த கோவிலை கட்டியுள்ளேன். விரைவில் கட்சி தலைவர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யலாம் என இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.