திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (19:45 IST)

மீண்டும் வெளுக்கப்போகும் மழை: எச்சரிக்கை அறிவிப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பருவமழை இன்னும் முடியவில்லை என்றே கருதப்படுகிறது
 
மேலும் தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை பெரும்பாலும் மேகமூட்டமாக இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், ஒருசில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி, திருவிடைமருதூர், நன்னிலம், கும்பகோணம், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது