தொடர்புடைய செய்திகள்
- இந்த ஆண்டும் பாடங்கள் குறைப்பா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
- இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தயாராகும் ஆசிரியர்கள்
- பள்ளிகள் செயல்படும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- பள்ளிகள் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு சாக்பீஸ் விற்பனை அதிகரிப்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு சாக்பீஸ் விற்பனை அதிகரிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து சாக்பீஸ் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை என்பதும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
பள்ளிகளை மட்டுமே நம்பி முழுக்க முழுக்க நடந்து வந்த சாக்பீஸ் தொழில் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாக்பீஸ் விற்பனை மந்தமான நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து தற்போது சாக்பீஸ் விற்பனை விறுவிறுப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் சாக்பீஸ் உற்பத்தி அதிகமாக இருக்கும் நிலையில் சாக்பீஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
