1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools will now have one day a week teaching justice classes

பள்ளிகள் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

students
பள்ளிகளில் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை முறையாக பராமரிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva