செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (11:02 IST)

பள்ளிகள் செயல்படும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

school
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 
அதேபோல் பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
எனவே அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளியில் மாணவர்களுக்கு அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.