வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தயாராகும் ஆசிரியர்கள்

schools
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ மாணவிகளை வரவேற்பு ஆசிரியர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதனை அடுத்து பள்ளிகள் தூய்மை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்பதும் மாணவ மாணவிகளை வரவேற்க ஆசிரியர்கள் வாசலில் மலர்கள் மற்றும் பூங்கொத்துடன் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று முதல் பள்ளிகள் திறந்தாலும் பள்ளிகள் இயங்கும் நேரம் குறித்த முடிவை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களை எடுத்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது பது குறிப்பிடத்தக்கது